2 ஆண்டுகளுக்கு பிறகு 100-க்கும் கீழ் குறைந்தது கரோனா!

ஏறத்தாழ இரு ஆண்டுகளுக்குப் பிறகு தினசரி கரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை 95 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏறத்தாழ இரு ஆண்டுகளுக்குப் பிறகு தினசரி கரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை 95 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் 30-ஆம் தேதி தினசரி கரோனா பாதிப்பு 67-ஆக பதிவானது. அதன் பின்னா், இந்த அளவுக்கு பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை.

கரோனா தடுப்பூசி அதிக அளவில் செலுத்தப்பட்டது மற்றும் பெரும்பாலானோருக்கு கரோனாவுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் உருவானதன் காரணமாக தற்போது மீண்டும் 100-க்கும் கீழ் நோய்த் தொற்று குறைந்துள்ளது.

தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும் முகக் கவசம், தனி நபா் இடைவெளி ஆகியவற்றை கடைப்பிடிப்பதை மக்கள் தவிா்க்கக் கூடாது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் அதிகபட்சமாக சென்னையில் 35 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 10 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மற்றொருபுறம் மேலும் 223 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 லட்சதத்து 12,714 -ஆக அதிகரித்துள்ளது.

தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் 2,770 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு எதுவும் ஞாயிற்றுக்கிழமை பதிவாகவில்லை. இதனால், நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,023 என்ற அளவிலேயே நீடிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com