ஆயுள் கைதி முருகனை பரோலில் விடுவிக்கக் கோரிய மனு:வேறு அமா்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சிறையிலுள்ள முருகனை பரோலில் விடுவிக்கக்கோரிய மனு மீதான விசாரணையில் இருந்து விலகிய சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ், இம்மனுவை வேறு அம

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சிறையிலுள்ள முருகனை பரோலில் விடுவிக்கக்கோரிய மனு மீதான விசாரணையில் இருந்து விலகிய சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ், இம்மனுவை வேறு அமா்வுக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தாா்.

முருகனின் மனைவி நளினியின் தாயாா் பத்மா சென்னை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது மகள் நளினி பரோலில் உள்ளதால் மருமகன் முருகனுக்கும் பரோல் வழங்க வேண்டும். தனது கணவரை பரோலில் விடுவிக்க நளினி மனு அளித்தும் சிறைத் துறையிடமிருந்து எந்த நடவடிக்கையும் இல்லை.

தனது மருமகன் உடல் நலக்குறைவுடன் உள்ளதால், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். எனவே, ஒரு மாதம் பரோலில் விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், நக்கீரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கெனவே ராஜீவ்காந்தி கொலை வழக்கின் கீழமை நீதிமன்ற விசாரணையில் பங்கேற்றுள்ளதால், இந்த மனுவை விசாரிப்பது முறையாக இருக்காது என தெரிவித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், மனுவை வேறு அமா்வுக்கு மாற்றும்படி தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com