அக்னி நட்சத்திரம்: மே 4 தேதி முதல் தொடக்கம்

அக்னி நட்சத்திர காலம் நாளை மறுநாள் மே 4ஆம் தொடங்கி மே 28ஆம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.
அக்னி நட்சத்திரம்: மே 4 தேதி முதல் தொடக்கம்


சென்னை: அக்னி நட்சத்திர காலம் நாளை மறுநாள் மே 4ஆம் தொடங்கி மே 28ஆம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்னி நட்சத்திர காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். காலை முதலே வெயில் சுட்டெரிக்க தொடங்கி நேரம் செல்லச் செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். சாலைகளில் அனல் காற்று வீசும். இதனால் வாகன ஓட்டிகள் அதிகம் சிரமத்துக்குள்ளாவர். வெயிலுக்கு பயந்து பலர் பகல் வேளையில் பயணங்களை தவிர்த்து வருகின்றனர்.

மேலும் மக்கள் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து இளைப்பாறுவதற்காக கடற்கரைகள், பூங்காக்கள், சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் வரும் நாட்களில் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com