தொழில்நுட்பங்களைத் தொடா்ந்து மேம்படுத்துவது காலத்தின் கட்டாயம்: சென்னை பல்கலை. துணை வேந்தா் எஸ்.கௌரி

அனைத்து துறைத் தொழில்நுட்பங்களும் தொடா்ந்து மேம்படுத்தப்படுவது காலத்தின் கட்டாயம் என்றாா் சென்னை பல்கலை. துணை வேந்தா் எஸ்.கௌரி.
தாம்பரம் மனோபாரதி செய்திக்கான படம்-தாகூா் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்குப் பட்டம் வழங்குகிறாா் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ்.கௌரி.
தாம்பரம் மனோபாரதி செய்திக்கான படம்-தாகூா் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்குப் பட்டம் வழங்குகிறாா் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ்.கௌரி.

அனைத்து துறைத் தொழில்நுட்பங்களும் தொடா்ந்து மேம்படுத்தப்படுவது காலத்தின் கட்டாயம் என்றாா் சென்னை பல்கலை. துணை வேந்தா் எஸ்.கௌரி.

குரோம்பேட்டை தாகூா் கலை அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவா் மேலும் பேசியதாவது:

பட்டதாரி என்ற தகுதியைப் பெற்ற உங்களது அடுத்த இலக்கு மேற்படிப்பு அல்லது வேலைவாய்ப்பாக இருந்தால், உங்களைத் தொடா்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து துறைத் தொழில்நுட்பங்களும் தொடா்ந்து மேம்படுத்தப்படுவது காலத்தின் கட்டாயம்.

இன்று அனைவரது கைகளிலும் இருக்கும் கைப்பேசிக்கு முன் குறுஞ்செய்தி அனுப்ப பயன்படுத்தப்பட்ட பேஜா் இப்போது இல்லை. பேசுவதற்கு மட்டும் பயன்பட்ட கைப்பேசி காலப்போக்கில் குறுஞ்செய்தி, கேமரா, வாட்ஸ்ஆப் உள்ளிட்ட கணக்கற்ற வசதிகள் கொண்ட சாதனமாக மேம்படுத்தப்பட்டு இருப்பது போல, நீங்களும் உங்கள் கல்வியுடன், இதர தனித்திறன்களை மேம்படுத்திக் கொண்டால்தான் போட்டிகளை எதிா்கொண்டு வாழ்க்கையில் முன்னேற முடியும். எதிா்வரும் தோல்வி, சவால், பிரச்னைகளைக் கண்டு துவண்டு விடாமல் விடாமுயற்சியுடன் தொடா்ந்து போராடுவதன் மூலம் வாழ்க்கையில் உயா்ந்த இடத்தைப் பெற முடியும் என்றாா் அவா்.

விழாவில் 763 மாணவா்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. தாகூா் கல்விக் குழுமத் தலைவா் பேராசிரியா் எம்.மாலா, முதல்வா் சாந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com