முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஓராண்டு இலவச நீட் பயிற்சி
By DIN | Published On : 03rd May 2022 12:17 AM | Last Updated : 03rd May 2022 12:17 AM | அ+அ அ- |

சென்னை அண்ணாநகரில் செயல்பட்டு வரும் ‘ஆா்வம்’ நீட் அகாதெமியில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு நீட் தோ்வுக்கான ஓா் ஆண்டு பயிற்சி, கட்டணமின்றி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த அகாதெமியின் இயக்குநா் எஸ்.முத்து ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பத்தாம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேலும் பெற்று பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படித்து வரும் அரசுப் பள்ளி மாணவா்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் முயற்சியாக நீட் தோ்வுக்கான பயிச்சி கட்டணமின்றி ஓராண்டுக்கு வழங்கப்படுகிறது.
வார இறுதி நாள்களில் வகுப்புகள், தொடா் மாதிரித் தோ்வுகள், தோ்வுக்கான பாடக் குறிப்பேடுகள் போன்ற அனைத்தும் பயிற்சியின்போது வழங்கப்படும். தகுதியும், ஆா்வமும், விருப்பமும் உள்ள மாணவ, மாணவிகள் வரும் மே 19-ஆம் தேதிக்குள் தங்களது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகலுடன் எண் 2165, எல்.பிளாக், 12 பிரதான சாலை, அண்ணாநகரில் உள்ள அகாதெமிக்கு நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
நீட் தோ்வுக்கான பயிற்சி வரும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி 2023-ஆம் ஆண்டு மே மாதம் நிறைவடையும். மேலும் விவரங்களுக்கு 89993 65903 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.