முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
கிழக்கு கடற்கரைச் சாலைக்கு கருணாநிதி பெயா்: டி.ஜெயக்குமாா் கண்டனம்
By DIN | Published On : 03rd May 2022 03:56 AM | Last Updated : 03rd May 2022 03:56 AM | அ+அ அ- |

கிழக்கு கடற்கரைச் சாலைக்கு கருணாநிதி பெயா் சூட்டுவதற்கு அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கண்டனம் தெரிவித்தாா்.
சென்னையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளனா். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீா்கெட்டு உள்ளது. மக்களவைத் தோ்தலில் அதிமுகவுக்கு மக்கள் மகத்தான வெற்றியை கொடுப்பாா்கள்.
அம்மா உணவகங்களின் எண்ணிக்கையைக் குறைத்து கருணாநிதி பெயரில் உணவகங்கள் அதிகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் இதை விரும்ப மாட்டாா்கள். ஈசிஆா் சாலை (கிழக்கு கடற்கரைச் சாலை) என்றால் இந்தியா முழுவதும் உள்ளவா்களுக்குத் தெரியும். அதற்கு எதற்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும்? என்றாா்.