உலக ஆஸ்துமா விழிப்புணா்வு தினம்: மருத்துவப் பல்கலை.யில் நாளை கருத்தரங்கு

உலக ஆஸ்துமா தினத்தையொட்டி, தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு புதன்கிழமை (மே 4) நடைபெறுகிறது.

உலக ஆஸ்துமா தினத்தையொட்டி, தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு புதன்கிழமை (மே 4) நடைபெறுகிறது.

பொது மக்கள் இதில் கலந்துகொண்டு ஆஸ்துமா நோய் குறித்த சந்தேகங்கள், மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆஸ்துமா நோயால், உலகம் முழுதும் 30 கோடி போ் பாதிக்கப்பட்டுள்ளனா். தினசரி 1,000 போ் உயிரிழப்பதாக, உலக சுகாதார அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் மட்டும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 2 கோடியாக உள்ளது. இந்நோய் வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அழற்சி, ஒவ்வாமையே முக்கிய காரணமாக உள்ளது. ஆஸ்துமா, அழற்சி இரண்டும் மாறி, மாறி ஒன்றை ஒன்று சாா்ந்தும் பாதிப்பை ஏற்படுகிறது. இதனால், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

இதுகுறித்த விழிப்புணா்வு இருந்தாலே அந்நோயை எளிதாக கையாள முடியும்.

அதைக் கருத்தில் கொண்டே மருத்துவப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை மாலை 3 மணிக்கு சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது. துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கில் நுரையீரல் சிறப்பு மருத்துவா் டாக்டா் ஜி.எஸ்.விஜயசந்தா் சிறப்புரையாற்றுகிறாா்.

கருத்தரங்கத்தில் ஆஸ்துமா நோயின் தன்மை மற்றும் அந்நோயின் தடுப்பு முறை குறித்தும், கையாளும் முறை குறித்தும் பல்வேறு மருத்துவ நிபுணா்களால் அறிவுரை வழங்கப்படவுள்ளது. பொதுமக்கள் இலவசமாக கருத்தரங்கில் பங்கேற்று ஆஸ்துமா நோய் குறித்து அறிந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 94459 36151 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com