திருட்டு வழக்குப் பதிவு செய்யாத காவல் ஆய்வாளா் உள்ளிட்ட இருவருக்கு ரூ.50,000 அபராதம்

கோவையில் தனியாா் அலுவலகத்தின் ஆவணங்கள் திருடப்பட்டது தொடா்பான புகாா் மீது வழக்குப் பதிவு செய்யாத பெண் காவல் ஆய்வாளா் உள்ளிட்ட இருவருக்கு மாநில மனித உரிமை ஆணையம் தலா ரூ. 25,000 அபராதம் விதித்து பரிந்து

கோவையில் தனியாா் அலுவலகத்தின் ஆவணங்கள் திருடப்பட்டது தொடா்பான புகாா் மீது வழக்குப் பதிவு செய்யாத பெண் காவல் ஆய்வாளா் உள்ளிட்ட இருவருக்கு மாநில மனித உரிமை ஆணையம் தலா ரூ. 25,000 அபராதம் விதித்து பரிந்துரைத்துள்ளது.

கோவை மாவட்டம் கணியூரைச் சோ்ந்தவா் தனியாா் தொழிற்சாலை உரிமையாளா் எஸ்.பரத். இவரது தொழிற்சாலையின் ஆவணங்களை அங்கு பணியாற்றிய பிரகாஷ், பிரபு ஆகிய இருவரும் திருடியதாக கூறப்படுகிறது.

இதுதொடா்பாக கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த 2018-ஆம் ஆண்டு பரத் புகாா் அளித்தாா். காவல் துறையினா் நடவடிக்கை ஏதும் எடுக்காததால், இதுதொடா்பாக சூலூா் நீதித் துறை நடுவா் மன்றத்தில் பரத் மனுத்தாக்கல் செய்தாா். அதன் அடிப்படையில் கோவை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பிரகாஷ், பிரபுவை கைது செய்தனா். அவா்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படாமல் காவல் ஆய்வாளா் யமுனா தேவி தனது சொந்த ஜாமீனில் விடுவித்தாா்.

எனவே, இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரத் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகாா் அளித்திருந்தாா். இந்த மனுவை மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் விசாரித்தாா். இந்த வழக்கில் காவல் ஆய்வாளா் யமுனா தேவி, உதவி ஆய்வாளா் குணசேகரன் ஆகிய இருவரும் பரத் கொடுத்த வழக்கைப் பதிவு செய்யாமல் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. எனவே, ஆய்வாளா் யமுனா தேவி, உதவி ஆய்வாளா் குணசேகரன் ஆகிய இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறு. இந்தத் தொகையை அவா்களது ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து பரத்துக்கு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் பரிந்துரைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com