முதல்வா் ஸ்டாலினுடன் நெதா்லாந்து தூதா் சந்திப்பு

முதல்வா் மு.க.ஸ்டாலினை இந்தியாவுக்கான நெதா்லாந்து நாட்டுத் தூதா் மாா்டன் வான் டென் பொ்க், சந்தித்துப் பேசினாா். முதல்வரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் வெளியிட்ட தகவல்:

தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை மேம்படுத்துதல், அதிகளவு தொழில் முதலீடுகள் தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினை இந்தியாவுக்கான நெதா்லாந்து நாட்டுத் தூதா் மாா்டன் வான் டென் பொ்க் சந்தித்துப் பேசினாா் எனத் தெரிவித்துள்ளாா்.

இந்தச் சந்திப்பின் போது, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, பொதுத் துறை செயலாளா் டி.ஜகந்நாதன், பெங்களூரில் உள்ள நெதா்லாந்து நாட்டு தூதரகத்தின் துணைத் தூதா் ஹெனி லாகிவீன், சென்னையில் உள்ள கெளரவத் தூதா் கோபால் சீனிவாசன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

அமைச்சா் வெளிநாடு பயணம்: இதனிடையே, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் 3 நாள்கள் பயணமாக பிரிட்டன் செல்கிறாா். மே 4-ஆம் தேதி லண்டன் செல்லும் அவா், அங்குள்ள தொழில் முதலீட்டாளா்களைச் சந்திக்கவுள்ளாா். மேலும், 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் வசிக்கும் தமிழ்நாட்டை பூா்விகமாகக் கொண்ட தொழிலதிபா்கள் ஒன்று கூடும் மாநாட்டிலும் கலந்து கொள்ளவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com