இராயப்பேட்டை போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் மரணம்: 7 பேர் கைது

இராயப்பேட்டை பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த நபரை அழைத்துச் சென்று 
இராயப்பேட்டை போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் மரணம்: 7 பேர் கைது

இராயப்பேட்டை பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த நபரை அழைத்துச் சென்று உருட்டு கட்டையில் தாக்கியதில் இறந்ததால் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து 7 நபர்கள் கைது சிறையில் அடைத்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான ஒருவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

சென்னை, இராயப்பேட்டையில் வசித்து வந்தவர் ராஜ் (48) தந்தை பெயர் முனுசாமி என்பவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி தினந்தோறும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது குடும்பத்தினர், ராஜ் என்பவரை இராயப்பேட்டையில் உள்ள போதை மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்தனர். 

இங்கு தங்கியிருந்த ராஜ் சற்று திருந்தியதால் இவரது குடும்பத்தினர் ராஜை அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்ற நிலையில், ராஜ் மீண்டும் நேற்று இரவு மது அருந்திவிட்டு போதையில் வீட்டிற்கு வந்ததால், இவரது குடும்பத்தினர் மறுபடியும்  போதை மறுவாழ்வு இல்லத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த மது போதை மறுவாழ்வு மையம் இல்லத்தின் நபர்கள் ராஜ் வீட்டிற்கு சென்று ராஜை காரில் ஏற்றிக் கொண்டு அவர்களது மறுவாழ்வு இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர் பின்னர்

நேற்று நள்ளிரவு மேற்படி போதை மறுவாழ்வு இல்லத்திலிருந்து ராஜின் குடும்பத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தங்களது கணவர் ராஜ் உடல் நலக் குறைவாக இறந்து விட்டதாக தகவல்  தெரிவித்ததின் பேரில், ராஜின் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது இரத்தக்காயங்களுடன் ராஜ் இறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த  ராஜின் மனைவி, 100  எண்ணிற்கு காவல் கட்டுப்பாட்டறைக்கு தொடர்பு கொண்டு தனது கணவர் சாவில் மர்மம் உள்ளதாக, விசாரித்து நடவடிக்கை எடுக்கும் படி கண்ணீருடன் புகார் தெரிவித்தார். 

புகாரின்  அடிப்படையில், D-2 அண்ணாசாலை உதவி ஆணையர் பாஸ்கரன் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சுந்தரம் தலைமையில் காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனையில் இயற்கைக்கு மாறான மரணம் அடைந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர்  இயற்கைக்கு மாறான பிரிவில் வழக்குப்பதிவு செய்து பணி ஊழியர்களை தனித்தனியாக தீவிர விசாரணை நடத்தினர் 

ராஜ் நேற்று இரவு மீண்டும் மது அருந்தியுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்ததின் பேரில், மேற்படி மறு வாழ்வு இல்லத்தின் உரிமையாளர் லோகேஸ்வரி என்பவரின் கணவர் கார்த்திக்கேயன் கூறியதின் பேரில், மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் உள்பட ஊழியர்கள் காரில் ராஜ் வீட்டிற்கு சென்று அவரை மறுவாழ்வு இல்லத்திற்கு அழைத்து வந்து மறுபடியும் மது அருந்த  கேட்டுக்க்கொண்டு உருட்டு கட்டையால் தாக்கியதில், பலத்த காயமடைந்து ராஜ் அங்கு இறந்து விட்டார்  என்று குற்றவாளிகள் ஒப்புக் கொண்டனர்  

அதன் பேரில், மேற்படி வழக்கில் இயற்கைக்கு மாறான மரணம் பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, கொலைப்பிரிவு உள்ளிட்ட சட்டப்பிரிவுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு,  குற்றவாளிகளான யுவராஜ், செல்வமணி, சதிஷ், கேசவன், சரவணன், மோகன், பார்த்தசாரதி ஆகிய 7 பேர் கொண்ட மது போதை மறுவாழ்வு மையம் ஊழியர்களான  குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் விசாரணையில் மாநில மனநல அமைப்பிடம் முறையான அனுமதி ஏதும் பெறாமலும் ஆவணங்கள் இல்லாமலும் இயங்கி வந்தது தெரியவந்துள்ளது.

பின்னர் கைது செய்யப்பட்ட 7 நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான மறு வாழ்வு இல்லத்தின் உரிமையாளர் லோகேஸ்வரியின் கணவரான கார்த்திக்கேயன் என்பவரை பிடிக்க காவல்துறையினர் விரைந்துள்ளனர். அதேபோல, கடலூர் மாவட்டத்திலும் இன்று இதே போல் சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com