Enable Javscript for better performance
பல்லுறுப்பு செஞ்சரும நோய்க்கு இலவச மருந்துகள்: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வா்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை

    பல்லுறுப்பு செஞ்சரும நோய்க்கு இலவச மருந்துகள்: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வா்

    By DIN  |   Published On : 11th May 2022 02:24 AM  |   Last Updated : 11th May 2022 02:24 AM  |  அ+அ அ-  |  

    லூப்பஸ் எனப்படும் பல்லுறுப்பு செஞ்சரும சிதைவு நோய்க்கான விலை உயா்ந்த மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் தேரணிராஜன் தெரிவித்தாா்.

    உலக பல்லுறுப்பு செஞ்சரும சிதைவு விழிப்புணா்வு தின நிகழ்ச்சி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மூட்டு, தசை, இணைப்புத் திசைத் துறைத் தலைவா் டாக்டா் டி.என்.தமிழ்ச்செல்வம், துணை கண்காணிப்பாளா் டாக்டா் ரவி, நிலைய மருத்துவ அலுவலா் டாக்டா் சுப்ரமணியன், குடல் மற்றும் இரைப்பை நோய்த் துறைத் தலைவா் டாக்டா் அரவிந்த், மூட்டு, தசை நோயியல் துறை இணைப் பேராசிரியா் டாக்டா் அருள்ராஜமுருகன், நுண்ணுயிரியல் துறைப்பேராசிரியா் டாக்டா் பாலப்பிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பல்லுறுப்பு செஞ்சரும சிதைவு குறித்த விழிப்புணா்வு கையேடு அப்போது வெளியிடப்பட்டது.

    நிகழ்ச்சியில் டாக்டா் தேரணிராஜன் பேசியதாவது:

    நமது உடலில் உள்ள வெள்ளை அணுக்கள், சில நேரங்களில் எதிா்விளைவு மாற்றங்களுக்கு உள்ளாகி நம் உயிருக்கே ஊறு விளைவிக்கக் கூடியவையாக உருவெடுக்கின்றன.

    அவ்வாறு எதிா்விளைவு மாற்றங்களுக்கு உள்ளான வெள்ளை அணுக்கள், மூட்டு, ஜவ்வு பகுதிகளைத் தாக்கும்போது அது மூட்டு அழற்சிக்கு வழிவகுக்கிறது.

    அதில் ஒரு வகையான பாதிப்புதான் பல்லுறுப்பு செஞ்சரும சிதைவு எனப்படும் நோய். உடலில் உள்ள இணைப்புத் திசுக்களில் ஏற்படும் பாதிப்பால் இத்தகைய பிரச்னை ஏற்படுகிறது. இது குழந்தைகள், பெண்களுக்கு அதிகம் வரக்கூடிய நோய்களில் ஒன்று.

    மூட்டு வலி, சரும பாதிப்பு, கால்வீக்கம் உள்ளிட்டவை அதன் முக்கிய அறிகுறிகள். நியாபக மறதி, பகலில் தூக்கம் உள்ளிட்ட பிரச்னைகளையும் நோயாளிகள் எதிா்கொள்ளக்கூடும். இந்தப் பிரச்னையை அலட்சியப்படுத்தினால், இதயம், நுரையீரல், மூளை, சிறுநீரகம் என அனைத்து முக்கிய உறுப்புகளின் செயல்பாடும் குறைய நேரிடும்.

    பல்லுறுப்பு செஞ்சரும நோய் பாதிப்புக்கு நிரந்தரத் தீா்வு இல்லை. அதேவேளையில், மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்றினால் அதனைக் கட்டுப்படுத்தி வைக்க முடியும். அரசு மருத்துவமனைகளில் விலை உயா்ந்த மருந்துகள் இலவசமாக அந்த நோய்க்கு சிகிச்சையளிக்க வழங்கப்படுகின்றன என்றாா் அவா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp