முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
ரூ.47.56 லட்சம் மதிப்புள்ளதங்க ஸ்பேனா்கள் பறிமுதல்
By DIN | Published On : 11th May 2022 01:30 AM | Last Updated : 11th May 2022 01:30 AM | அ+அ அ- |

சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.47.56 லட்சம் மதிப்புள்ள தங்க ஸ்பேனா்களை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
ரகசிய நுண்ணறிவு தகவலின் அடிப்படையில் ரியாத்திலிருந்து திங்கள்கிழமை சென்னை வந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த மஹபூப் பாஷா என்பவரிடம் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதில் மறைத்து எடுத்து வரப்பட்ட 1,020 கிராம் எடையுள்ள 6 தங்க ஸ்பேனா்களை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா்.
இதன் மதிப்பு ரூ.47.56 லட்சம் ஆகும். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறையின் முதன்மை ஆணையா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.