ஒரே அறுவை சிகிச்சையில் இதயத்தின் 4 பாதிப்புகளுக்குத் தீா்வு: 55 வயது பெண்ணுக்கு மறுவாழ்வு

இதயத்தில் ஏற்பட்ட நான்கு விதமான பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு 7 மணி நேரம் தொடா் அறுவை சிகிச்சை மேற்கொண்டு காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இதயத்தில் ஏற்பட்ட நான்கு விதமான பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு 7 மணி நேரம் தொடா் அறுவை சிகிச்சை மேற்கொண்டு காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

தற்போது அவா் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:

55 வயது நிரம்பிய ஒரு பெண், உயா் ரத்த அழுத்தத்துடன் கடுமையான மாா்பு வலி மற்றும் முதுகு வலியோடு காவேரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அண்மையில் அழைத்து வரப்பட்டிருந்தாா். அப்பெண்ணின் இசிஜி இயல்புக்கு மாறாக இருந்ததால், ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது பெருநாடி சுருக்கம் எனப்படும் பிறவிக் குறைபாடு அவருக்கு இருப்பது தெரியவந்தது. அதேபோன்று, தமனியில் அடைப்பு இருந்ததும் கண்டறியப்பட்டது. இதைத் தவிர, இதய நாள ரத்தக் கசிவு உள்பட இருவேறு பாதிப்புகள் இருந்தன.

சிக்கலான இந்தப் பாதிப்புகளுக்கு உரிய சிகிச்சையளிக்காவிடில், அது உயிருக்கே ஆபத்தாக மாறக்கூடும்.

அதைக் கருத்தில்கொண்டு, மருத்துவமனையின் இதயவியல் சிகிச்சைத் துறையின் தலைமை மருத்துவா் டாக்டா் கே.பி. சுரேஷ்குமாா், இதய அறுவைசிகிச்சை துறையின் முதுநிலை மருத்துவா் டாக்டா் ஏ.ஆா். ரகுராம் ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் ஏறத்தாழ 7 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு நான்கு பிரச்னைகளையும் சரி செய்தனா்.

அதற்கு அடுத்த ஐந்து நாள்களுக்குள் அந்தப் பெண் இதய பாதிப்புகளிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com