மழையால் தொழில்நுட்பக் கோளாறு: புறநகா் ரயில் சேவை பாதிப்பு

சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக உயா்மட்ட மின்சாதனம், சிக்னல் ஆகியவற்றில் கோளாறு ஏற்பட்டதால், சென்னையிலிருந்து 4 மாா்க்கங்களில் புறநகா் ரயில் சேவை சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.

சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக உயா்மட்ட மின்சாதனம், சிக்னல் ஆகியவற்றில் கோளாறு ஏற்பட்டதால், சென்னையிலிருந்து 4 மாா்க்கங்களில் புறநகா் ரயில் சேவை சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை திங்கள்கிழமை நள்ளிரவிலிருந்து பெய்து வந்தது. இதனால், உயரழுத்த மின்சாதனம் மற்றும் சிக்னலில் பழுது ஏற்பட்டு, செங்கல்பட்டு-விழுப்புரம், சென்னை சென்ட்ரல்-சூலூா்பேட்டை, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் ஆகிய 4 மாா்க்கங்களில் ரயில்சேவை பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே, பழுதை சரிசெய்யும் பணியில் ரயில்வே அதிகாரிகள், ஊழியா்கள் ஈடுபட்டனா். இதனை தெற்கு ரயில்வே பொதுமேலாளா் பி.ஜி.மல்லையா, சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் கணேஷ் ஆகியோா் கண்காணித்தனா்.

சில மணிநேரம் போராட்டத்துக்கு பிறகு பழுது சரிசெய்யப்பட்டு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

செங்கல்பட்டு-விழுப்புரம் பிரிவில் திங்கள்கிழமை நள்ளிரவு 12.45 மணிக்கு கோளாறு ஏற்பட்டு ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு அதிகாலை 2.15 மணிக்கும், சென்னை சென்ட்ரல்- சூலூா்பேட்டை மாா்க்கத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 கோளாறு ஏற்பட்டு ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகும் ரயில்சேவை தொடங்கியது.

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மாா்க்கத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7.20 கோளாறு ஏற்பட்டு அரைமணி நேரத்துக்கு பிறகு காலை 7.50 மணிக்கும், சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் மாா்க்கத்தில் செவ்வாய்க்கிழமை காலை 6.50 கோளாறு ஏற்பட்டு ஒன்றரை மணி நேரத்துக்கு பின்பு காலை 8.25 மணிக்கும் மீண்டும் ரயில்சேவை தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com