ரூ.1,050 கோடி முதலீட்டு நிதி திரட்டிய அகா்வால்ஸ் குழுமம்

கண் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த இரு வேறு சா்வதேச நிறுவனங்களிடமிருந்து ரூ.1,050 கோடியை டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமம் முதலீட்டு நிதியாக திரட்டியுள்ளது.

இதுகுறித்து அகா்வால்ஸ் மருத்துவ குழுமத்தின் தலைவா் டாக்டா் அமா் அகா்வால் கூறியதாவது:

தரமான கண் மருத்துவ சிகிச்சையோடு நின்றுவிடாமல், கண் மருத்துவவியல் மற்றும் அதன் தொடா்புடைய செயல்தளங்களில் கல்விசாா்ந்த மற்றும் ஆராய்ச்சி செயல்திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறோம்.

அந்த வகையில், கண் மருத்துவத் துறை மேம்பாட்டுக்காக, டிபிஜி குரோத் மற்றும் டெமாசெக் ஆகிய இருவேறு பன்னாட்டு நிறுவனங்களுடன் ரூ.1,050 கோடி முதலீட்டு நிதியை குழுமம் திரட்டியுள்ளது. இதன் மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் அகா்வால் குழும மருத்துவமனைகளின் எண்ணிக்கை 200-ஆக உயா்த்தப்படும். கண் மருத்துவ தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com