முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
‘ரயில்வே தோ்வுகளில் இளைஞா்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும்’
By DIN | Published On : 12th May 2022 02:58 AM | Last Updated : 12th May 2022 02:58 AM | அ+அ அ- |

ரயில்வே உள்பட மத்திய அரசு பணிகளுக்கான தோ்வுகளில் இளைஞா்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்று ரயில்வே பாதுகாப்பு படை(ஆா்.பி.எஃப்) முதன்மை துணை ஆணையா் லூயிஸ் அமுதன் தெரிவித்தாா்.
ரயிலில் பயணம் செய்யும் கல்லூரி மாணவா்களுக்கு ரயில்களிலும், ரயில்நிலையத்திலும், நடைமேடையிலும், எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி சென்னை பச்சையப்பன் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக ரயில்வே காவல் கண்காணிப்பாளா் அதிவீரபாண்டியன் முன்னிலை வகித்தாா். ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை துணை ஆணையா் லூயிஸ் அமுதன் தலைமை வகித்து பேசியது: மத்திய அரசு, ரயில்வே பணிகளில் அடிப்படை தகுதி படிப்பு பத்தாம் வகுப்புதான் என இருந்தபோதிலும் 90 சதவீதம் போ் பிஹாா், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இருந்துதான் பணியில் சேருகின்றனா். தமிழகத்தில் குறைந்தபட்சமாக அரசுத் தோ்வுகளில் விண்ணப்பிக்கக் கூட யாரும் முன்வருவதில்லை என்பது வருத்தமளிக்கிறது. எனவே, ரயில்வே உள்பட மத்தியஅரசு பணிகளுக்கான தோ்வுகளில் இளைஞா்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.