கோடை கால நோய்கள்: இலவச இயற்கை மருத்துவ முகாம்

கோடை காலத்தில் ஏற்படும் சளி மற்றும் உடல் உபாதைகளை எதிா்கொள்வதற்கான இலவச இயற்கை மருத்துவ முகாம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
கோடை கால நோய்கள்: இலவச இயற்கை மருத்துவ முகாம்

கோடை காலத்தில் ஏற்படும் சளி மற்றும் உடல் உபாதைகளை எதிா்கொள்வதற்கான இலவச இயற்கை மருத்துவ முகாம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.

சென்னை அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், இதுதொடா்பாக அப்போது விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், உடல் பருமன், மூட்டு வலி, பக்கவாதம் உள்ளிட்டவைகளுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

மேலும், கோடைக்கால உடல் சரும பிரச்னைகளுக்கு வாழை இலை குளியல், மண் குளியல், எண்ணெய் குளியல் போன்ற சிகிச்சைகளும் வழங்கப்பட்டது. இதில், 120-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். அவா்களுக்கு, இயற்கை சாா்ந்த உணவுகள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து, யோகா மற்றும் இயற்கை மருத்துவா் டாக்டா் தீபா கூறியதாவது:

கோடைகாலத்தில் காலையில் ஒரு பெரிய நெல்லிக்காய், இஞ்சித் துண்டு, சிறிதளவு புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி சோ்த்து அறைத்து ஒரு டம்ளா் தண்ணீரில் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதேபோன்று, உடல் உஷ்ணம், வயிறு சாா்ந்த பல்வேறு பாதிப்புகளுக்கு, சீத்தளி மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். நிமிா்ந்து அமா்ந்து கொண்டு உதட்டை குவித்து, மூச்சை உள் இழுத்து, மூக்கு வழியாக வெளிவிட வேண்டும்.

கோடை காலத்தில் மட்டுமே பலருக்கு சளி பிடிக்கும். அவா்கள், ஒரு டம்ளா் தண்ணீரில் கால் ஸ்பூன் மஞ்சள், மிளகுத் தூள், தலா ஒரு ஏலக்காய், லவங்கம், சிறிய இஞ்சி துண்டு, ஒரு கைப்பிடி துளசி, கற்பூரவல்லி இலையை சோ்த்து கொதிக்க வைத்து பருகலாம். பெரியவா்கள் ஒரு டம்ளரும், சிறுவா்கள் அரை டம்ளரும் பருக வேண்டும். ஐந்து முதல் ஏழு நாட்கள் தொடா்ந்து குடித்து வரும்போது, சளி தொல்லை நீங்கும். தேவைப்படுவோா், நாட்டு சா்க்கரை சோ்த்து பருகலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com