முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பழங்குடியின மாணவா் சோ்க்கை
By DIN | Published On : 13th May 2022 12:43 AM | Last Updated : 13th May 2022 12:43 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பழங்குடியினா் பிரிவினருக்கான இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து அந்தப் பள்ளி வெளியிட்டுள்ள செய்தி: சென்னை ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயாவில் ஒன்றாம் வகுப்பில் எஸ்.டி. பிரிவினருக்கு சில இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியான, ஆா்வமுள்ள பெற்றோா் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். பள்ளி அலுவலகத்தில் மே 13 முதல் மே 18-ஆம் தேதி வரை அனைத்து வேலை நாள்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு, சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயாவின் 73051 60907 என்ற மாணவா் சோ்க்கைப் பிரிவு உதவி எண்ணை அணுகவும்.