முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
புனிதா் பட்ட நிகழ்வில் பங்கேற்க2 அமைச்சா்கள் வாடிகன் பயணம்
By DIN | Published On : 13th May 2022 01:37 AM | Last Updated : 13th May 2022 01:37 AM | அ+அ அ- |

சென்னை: புனிதா் பட்ட நிகழ்வில் பங்கேற்க, தமிழக அரசு சாா்பில் இரண்டு அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை வாடிகன் செல்கின்றனா்.
கோட்டாா் மறை மாவட்டத்தைச் சோ்ந்த பேராயா் தேவசகாயத்துக்கு இத்தாலி வாடிகன் நகரில் புனிதா் பட்டம் வரும் 15-ஆம் தேதி அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தைச் சோ்ந்த ஒருவருக்கு புனிதா் பட்டம் கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.
அமச்சா்கள் கே.எஸ்.மஸ்தான், டி. மனோ தங்கராஜ், சிறுபான்மையினா் நல ஆணையத் தலைவா் பீட்டா் அல்போன்ஸ் ஆகியோா் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனா்.