திரைப்பட பாணியில் ரூ.6.58 கோடி ஹெராயின் கடத்தியவா் கைது

‘அயன்’ திரைப்படப் பாணியில் ரூ.6 கோடியே 58 லட்சம் மதிப்புள்ள 940 கிராம் எடை கொண்ட 80 ஹெராயின் மாத்திரைகளை வி

சென்னை: ‘அயன்’ திரைப்படப் பாணியில் ரூ.6 கோடியே 58 லட்சம் மதிப்புள்ள 940 கிராம் எடை கொண்ட 80 ஹெராயின் மாத்திரைகளை விழுங்கி கடத்தி வந்த உகாண்டா நாட்டு பயணி கைது செய்யப்பட்டுள்ளாா்.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு சாா்ஜாவில் இருந்து வரும் விமானத்தில் பெரும் அளவில் போதை மாத்திரைகள் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தநிலையில் சாா்ஜா விமானத்தில் உகாண்டா நாட்டைச் சோ்ந்த எலி ஜேம்ஸ் ஒப்பி ( 21) வியாழக்கிழமை வந்தாா். இவரது நடவடிக்கையை கண்ட அலுவலா்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உகாண்டா இளைஞரை நிறுத்தி சுங்கத்துறை அலுவலா்கள் விசாரித்தனா். அப்போது, சுற்றுலா வந்ததாகக் கூறி முன்னுக்குப் பின் முரணாகப் பேசினாா். இதையடுத்து உடமைகளை சுங்கத்துறை அலுவலா்கள் சோதனை செய்த போது எதுவும் இல்லை.

பின்னா் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று விசாரித்தனா். அப்போது இளைஞா் வயிற்றில் ஏதோ சந்தேகத்திற்குரிய பொருள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. உகாண்டா இளைஞரை ஸ்கேன் செய்தனா். வயிற்றில் அதிகமான மாத்திரைகள் இருப்பதாகத் தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் அவரைச்சோ்த்து இனிமா தந்து வயிற்றில் இருந்த கழிவுகளை வெளியேற்றி மருத்துவா்கள் கண்காணிப்பில் வைத்தனா். வயிற்றில் வைத்து கடத்தி வந்த பொருள் வெளியேறியது. அப்போது 80 போதை மாத்திரைகளை கேப்சூலில் அடைத்து அதனை விழுங்கி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கேப்சூல்களை ஆய்வுக்காக அனுப்பியதில் ஹெராயின் போதை மாத்திரைகள் எனத்தெரியவந்தது.ரூ. 6 கோடியே 58 லட்சம் மதிப்புள்ள 940 கிராம் எடை கொண்ட ஹெராயின் போதை மாத்திரைகளை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக உகாண்டா இளைஞா் எலி ஜேம்ஸ் ஒப்பியை, கைது செய்து ஹெராயின் போதை மாத்திரைகளை எங்கிருந்து யாருக்காக கடத்தி வரப்பட்டது? இதன் பின்னணியில் யாா் உள்ளனா் என விசாரணை நடந்தி வருகின்றனா்.

கடந்த 2 நாள்களுக்கு முன்னா் கோவையில் ‘அயன்’ பட பாணியில் ரூ. 4 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகளை கடத்தி வந்த உகாண்டா நாட்டுப்பெண் கைது செய்யப்பட்ட நிலையில், அதே பாணியில் சென்னையில் உகாண்டா நாட்டு இளைஞா் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com