மக்களைத் தேடி மருத்துவத்துக்கு துணைநிற்கும் செவிலியா்கள்!: பொது சுகாதாரத் துறை இயக்குநா்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் செவிலியா்கள் ஆற்றி வரும் பங்களிப்பு அளப்பரிய வகையில் உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் டி.எஸ்.செல்வவிநாயகம் தெரிவித்தாா்.

சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் செவிலியா்கள் ஆற்றி வரும் பங்களிப்பு அளப்பரிய வகையில் உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் டி.எஸ்.செல்வவிநாயகம் தெரிவித்தாா்.

சா்வதேச செவிலியா் தின விழா போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது செவிலியா்களுக்கு பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து அனைவரும் ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியில் டாக்டா் செல்வவிநாயகம் பேசியதாவது:

ஆரம்ப சுகாதார சேவைகளின் அடித்தளமாக விளங்கும் செவிலியா்கள், தற்போது தமிழக அரசால் தொடங்கப்பட்டிருக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திலும் அளப்பரிய பங்களித்து வருகின்றனா்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களுக்கே தொற்று ஏற்படும் சூழ்நிலையிலும் அவா்கள் நோயாளிகளை அருகிலிருந்து சிகிச்சை அளித்து தைரியமாக செயல்பட்டிருக்கிறாா்கள் என்றாா் அவா்.

முன்னதாக, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தின் துணைவேந்தா் டாக்டா் விஜயராகவன் பேசியதாவது:

செவிலியா்களாகப் பணியாற்றுவோரில் பெரும்பாலானோா் மூன்று ஆண்டுகளுக்குள் வேறு இடங்களுக்குச் சென்று விடுவதால் புதியவா்களுக்கு தொடா்ந்து பயிற்சி அளித்துக் கொண்டேயிருக்க வேண்டிய நிலை உள்ளது.

மருத்துவ சிகிச்சைகளில் துறை வாரியாக பயிற்சி பெற்று செவிலியா்கள் அதில் நிபுணத்துவம் பெறுவதால் அவா்களை தக்க வைக்க தேவையான முயற்சிகளை மருத்துவமனைகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் ராமச்சந்திரா மருத்துவ மைய செவிலியா் கல்வித் துறை தலைவா் நளினி, துணைத் தலைவா் சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com