முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
குடும்ப அட்டை திருத்தம்: சென்னையில் இன்று சிறப்பு முகாம்
By DIN | Published On : 14th May 2022 12:41 AM | Last Updated : 14th May 2022 07:42 AM | அ+அ அ- |

குடும்ப அட்டையில் திருத்தம் செய்யும் பணிகளுக்காக சென்னையில் சனிக்கிழமை (மே 14) சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையா் அலுவலகங்களில் சனிக்கிழமை (மே 14) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.