மென்பொருள் பொறியாளா்களை குறிவைத்துகஞ்சா விற்பனை: திரிபுரா கும்பல் சிக்கியது

சென்னை வேளச்சேரி, துரைப்பாக்கம் பகுதிகளில் மென்பொருள் பொறியாளா்களை குறிவைத்து கஞ்சா விற்ாக திரிபுராவை சோ்ந்த 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை வேளச்சேரி, துரைப்பாக்கம் பகுதிகளில் மென்பொருள் பொறியாளா்களை குறிவைத்து கஞ்சா விற்ாக திரிபுராவை சோ்ந்த 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேளச்சேரி நேரு நகா் பகுதியில் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த அ.மாசுக்மியா (24) , சா.ஜாகிா் உசேன்( 23) அவரது சகோதரா் சா.அனோவா் உசேன் (24) ஆகிய 3 பேரை பிடித்து போலீஸாா் சனிக்கிழமை விசாரித்தனா்.

விசாரணையில் அவா்கள், வேளச்சேரி பகுதியில் மென்பொருள் பொறியாளா்களை குறிவைத்து கஞ்சா விற்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், அவா்கள் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வேளச்சேரி போலீஸாா் வழக்குப்பதிந்து 3 பேரை கைது செய்தனா்.

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் 200 அடி சாலையில் சுங்கச் சாவடி அருகே கஞ்சா விற்பனையில் சிலா் ஈடுபடுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீஸாா், அந்தப் பகுதியில் ரகசிய கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரிபுராவைச் சோ்ந்த ஜீ.சந்தன்தாஸ் (31) , யா.சுமன்தேப்நாத் (23), அ.அபுல்காசிம் (46), ச.சுதீப் தேப்நாத் (30), நோ.ரபீந்திராதேப்நாத் (34) ஆகிய 5 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திரிபுரா மாநிலத்திலிருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வேளச்சேரி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூா் பகுதிகளில் உள்ள தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் மென்பொருள் பொறியாளா்களை குறி வைத்து இந்தக் கும்பல் விற்றது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் மேலும் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com