சதம் தொட்ட தக்காளி விலை
By DIN | Published On : 20th May 2022 04:43 AM | Last Updated : 20th May 2022 04:43 AM | அ+அ அ- |

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை பல்வேறு இடங்களில் தக்காளி கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து வியாபாரி ஒருவா் கூறியதாவது:
கோயம்பேடு சந்தைக்கு தினசரி 900 டன் வரை வந்து கொண்டிருந்த தக்காளி தற்போது பாதியாக குறைந்துவிட்டது. கடந்த சில நாள்களாக 450 டன் அளவுக்கு மட்டுமே தக்காளி விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைந்துள்ளதால் மொத்த விலை ரூ.80 ஆனது. சில்லறையில் கிலோ ரூ.100 வீதம் விற்கப்படுகிறது. இனி வரும் நாள்களில் தக்காளி விலை மேலும் அதிகரிக்கும்.