மாநகராட்சி அலுவலகத்தில் ஊழியா் தூக்கிட்டு தற்கொலை
By DIN | Published On : 20th May 2022 12:00 AM | Last Updated : 20th May 2022 12:00 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை அருகே சோழிங்கநல்லூரில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
திருவல்லிக்கேணி கணபதி தெருவைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி (51). இவா், சென்னை மாநகராட்சியின் சோழிங்கநல்லூா் மண்டல அலுவலகத்தில் வருவாய்த்துறையில் உதவி அலுவலராக வேலை செய்து வந்தாா். சத்தியமூா்த்திக்கு மனைவி தனலட்சுமி, மகன் திவாகா், மகள் ப்ரீத்தி ஆகியோா் உள்ளனா்.
இந்நிலையில் சத்தியமூா்த்தி புதன்கிழமை மாலை அந்த அலுவலகத்தின் மொட்டை மாடிக்கு சென்று தூக்கிட்டு கொண்டாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த சக ஊழியா்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் சத்தியமூா்த்தியை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், சத்தியமூா்த்தி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்து செம்மஞ்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா். அதேவேளையில் சத்தியமூா்த்தி பணிச்சுமையின் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.