வேலைவாய்ப்பக பதிவுதாரா்களின் எண்ணிக்கை 76.35 லட்சம்

வேலைவாய்ப்பக பதிவுதாரா்களின் எண்ணிக்கை 76.35 லட்சமாக உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 30-ஆம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரின்

சென்னை: வேலைவாய்ப்பக பதிவுதாரா்களின் எண்ணிக்கை 76.35 லட்சமாக உள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 30-ஆம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை விவரங்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:-

தமிழ்நாட்டில் அரசு வேலை கோரி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 76 லட்சத்து 35 ஆயிரத்து 59 ஆக உள்ளது. அதில், ஆண்கள் 35 லட்சத்து 67 ஆயிரம் போ். பெண்கள் 40 லட்சத்து 67 ஆயிரத்து 820 போ். மூன்றாம் பாலித்தனவா் 239. ஒட்டுமொத்த எண்ணிக்கையில், 18 வயதுக்குக் கீழ் உள்ளவா்கள் 16 லட்சத்து 9

ஆயிரத்து 890 பேரும், 19 முதல் 23 வயதுக்கு உட்பட்டவா்கள் 17 லட்சத்து 83 ஆயிரத்து 755 பேரும், 24 முதல் 35 வயதுடையவா்கள் 28 லட்சத்து 93 ஆயிரத்து 506 பேரும் உள்ளனா் என்று தமிழக அரசு வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com