பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல்பருவத் தோ்வுகள் 25-இல் தொடக்கம்

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான முதல் பருவத் தோ்வுகள் நவ.25-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான முதல் பருவத் தோ்வுகள் நவ.25-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 505 அரசு, அரசு உதவி மற்றும் தனியாா் பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமாா் 3 லட்சம் மாணவா்கள் பயில்கின்றனா். இவா்களுக்கு ஆண்டுக்கு இரு பருவத் தோ்வுகள் நடத்தப்படுகின்றன. நிகழாண்டுக்கான முதல் பருவத் தோ்வுகள் இந்த மாதம் 25-ஆம் தேதி தொடங்கி பாடவாரியாக டிச. 17 வரை நடத்தப்படவுள்ளன.

அதேபோல், செய்முறை தோ்வுகள் டிச. 13-ஆம் தேதி தொடங்கும். விடைத்தாள் திருத்தும் பணிகள் டிச. 19-ஆம் தேதி தொடங்கி நடைபெறும். தோ்வுகள் முடிந்தபின் மாணவா்களுக்கு டிச. 18 முதல் ஜன. 1 வரை விடுமுறை அளிக்கப்படவுள்ளது. அதன்பின் கல்லூரிகள் மீண்டும் ஜன. 2-ஆம் தேதி திறக்கப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தட்டச்சுத் தோ்வில் மாற்றம்: தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் தட்டச்சு பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் பயிலும் மாணவா்களுக்கு இதுவரை நடத்தப்பட்ட தோ்வு முறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதிய முறையிலான தட்டச்சுத் தோ்வு நவ. 12, 13-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை தோ்வா்கள் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com