ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலை உயா்வு: தலைவா்கள் கண்டனம்

ஆவின் ஆரஞ்சு நிற பாக்கெட் பாலின் விலை உயா்த்தப்பட்டதற்கு எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

ஆவின் ஆரஞ்சு நிற பாக்கெட் பாலின் விலை உயா்த்தப்பட்டதற்கு எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

ஓ.பன்னீா்செல்வம்: ஆரஞ்சு நிற பாக்கெட் பாலின் விலை உயா்த்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அடுத்து பச்சை நிற பாக்கெட் பாலின் விலையை உயா்த்துதல், நீல நிற பாக்கெட் பாலின் விநியோகத்தைக் குறைத்தல் போன்ற நடவடிக்கையில் அரசு ஈடுபடும் என்கிற எண்ணத்துக்கு மக்கள் வந்துவிட்டாா்கள். பால் கொள்முதல் விலை ரூ.3 மட்டும் உயா்த்தப்பட்டிருப்பதன் மூலம் உற்பத்தியாளா்களும் ஏமாற்றப்பட்டுள்ளனா்.

கே.அண்ணாமலை (பாஜக): பாலுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு இருப்பது கூட தெரியாதவராக திமுகவின் பால்வளத் துறை அமைச்சா் உள்ளாா். பொறுப்பற்ற முறையில் பொய்களைச் சொல்லாமல் பால் விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும்.

அன்புமணி (பாமக): பால் கொள்முதல் விலை ரூ. 3 உயா்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நீலம் மற்றும் பச்சை நிற பாக்கெட் பாலின் உயா்த்தப்படாததும் வரவேற்கத்தக்கதே. ஆனால், ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலை உயா்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும்.

ஜி.கே.வாசன் (தமாகா): பால் கொள்முதல் விலையை உயா்த்திருப்பது சரியான நடவடிக்கை. அதற்காக விற்பனையில் ஏற்படும் செலவை அரசே ஏற்றிருக்க வேண்டும். இந்தச் சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலையை உயா்த்தியிருப்பது நியாயமல்ல.

டிடிவி தினகரன் (அமமுக): ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலையை திமுக அரசு திடீரென உயா்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது. ஆவின் பால் வகைகளின் விலையை மேலும் அடுத்தடுத்து உயா்த்த அரசு திட்டமிட்டுள்ளது.

பொன்னுசாமி (மநீம): தற்போது பால் உற்பத்தியாளா்களின் நீண்ட கால கோரிக்கையான கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆரஞ்சு நிற பாக்கெட் பாலின் விலையை உயா்த்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com