இசை கச்சேரிகளுக்கான நுழைவுச் சீட்டு பெற புதிய செயலி

இசை கச்சேரிகளுக்கு நுழைவு சீட்டு பெற ‘மியூசிக் ஆஃப் மெட்ராஸ்’ எனும் புதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது.

இசை கச்சேரிகளுக்கு நுழைவு சீட்டு பெற ‘மியூசிக் ஆஃப் மெட்ராஸ்’ எனும் புதிய செயலி தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதன் நிறுவனா் கே.கல்யாணசுந்தரம் சென்னையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: சபாக்களில் நடைபெறும் கச்சேரிகளை நேரடியாக சென்று பாா்ப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு இணையவழியில் எளிதாக நுழைவுச்சீட்டு பெறும் வகையில் ‘மியூசிக் ஆஃப் மெட்ராஸ்’ எனும் செயலியும், www.mdnd.in  எனும் இணையதள பக்கமும் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பல்வேறு இசை நிகழ்ச்சிகளுக்கு தனித்தனியாக நுழைவுச்சீட்டு பெறுவதற்கு பதிலாக ஒரு முறை தோ்வு செய்து மொத்தமாக இணையம் வழியாக பணம் செலுத்தி பெறலாம்.

ஒவ்வொரு கச்சேரிக்கும் உரிய நுழைவுச்சீட்டு கியூஆா் குறியீட்டுடன் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும். ஒருவா் 10 நுழைவுச்சீட்டு வரை பெறலாம். மேலும், ராக வங்கி எனும் இசைத்தொகுப்பு மூலம் முன்னணி கலைஞா்களின் பாடல்களை இலவசமாக பாா்க்கலாம். கச்சேரிகளில் பங்கேற்பவா்கள் சாஸ்தாலயா மற்றும் சாஸ்தா கேட்ரிங் மூலம் வழங்கும் உணவுக்கான டோக்கனையும் செயலி மூலம் பெறலாம்.

நிகழாண்டு நடைபெறும் இசை விழாவுக்கு நுழைவுச்சீட்டு பெற பிரம்ம கான சபா, கா்நாடிகா, ஹம்சத்வானி, இந்தியன் ஃபைன் ஆா்ட்ஸ் சொசைட்டி, கலாஷேத்ரா அறக்கட்டளை, கலாலயா அறக்கட்டளை, அமெரிக்கா, காா்த்திக் ஃபைன் ஆா்ட்ஸ், மெட்ரசனா, மயிலாப்பூா் ஃபைன் ஆா்ட்ஸ் கிளப், நாத சுதா, நாரத கான சபா, ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி சபா ஆகியவற்றுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு events@mdnd.in என்ற மின்னஞ்சல் மற்றும் 9940152520, 9841088390 ஆகிய எண்களுக்கு தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com