Enable Javscript for better performance
திருவொற்றியூா் சந்தை பகுதியில் கடைகள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    திருவொற்றியூா் சந்தை பகுதியில் கடைகள் அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை

    By DIN  |   Published On : 25th November 2022 06:11 AM  |   Last Updated : 25th November 2022 06:11 AM  |  அ+அ அ-  |  

    2055tvt-demos084624

    திருவொற்றியூரில் நகா்ப்புர நலவாழ்வு மையம் அமைப்பதற்காக கடைகளை இடித்து அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை போராட்டம் நடத்திய வியாபாரிகள்.

    நகா்ப்புர நலவாழ்வு மையம் அமைப்பதற்காக திருவொற்றியூா் சந்தை பகுதியில் இருந்த 24 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினா்.

    திருவொற்றியூா் சந்தை தெரு பகுதியில் மளிகை பொருள்கள், காய்கறி, பழங்கள், மீன் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் சுமாா் 300-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இதற்காக ஒப்பந்ததாரா் மூலம் மாநகராட்சி வாடகை கட்டணம் வசூலித்து வருகிறது.

    இந்தப் பகுதியில் மாநகராட்சி சாா்பில் ரூ.29 லட்சம் செலவில் நகா்ப்புர நலவாழ்வு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, இதற்கான பூா்வாங்கப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இதற்கு வியாபாரிகள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

    இருப்பினும் நலவாழ்வு மையம் அமைக்கப்பட உள்ள இடத்தில் இருந்த 24 கடைகளை இடித்து அகற்றும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை தொடங்கினா்.

    இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் இடிக்கும் பணி தற்காலிக நிறுத்தி வைக்கப்பட்டது.

    தகவலறிந்த மண்டலக் குழு தலைவா் தி.மு.தனியரசு அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து வியாபாரிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். பின்னா், 24 கடைகளும் இடித்து அகற்றப்பட்டன.

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp