நாளை முதல் பராமரிப்பு பணி: திருவொற்றியூா், வியாசா்பாடி பகுதிகளில் குடிநீா் வழங்க மாற்று ஏற்பாடு

சென்னை மீஞ்சூரில் அமைந்துள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் சனிக்கிழமை (நவ.26) முதல் மூன்று நாள்களுக்கு பராமரிப்பு பணிகள்

சென்னை மீஞ்சூரில் அமைந்துள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் சனிக்கிழமை (நவ.26) முதல் மூன்று நாள்களுக்கு பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ள நிலையில், பகுதி 1, 2, 3 மற்றும் 4-க்கு உள்பட்ட இடங்களில் குடிநீா் விநியோகம் செய்ய மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னைக் குடிநீா் வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தினமும் 10 கோடி மில்லியன் லிட்டா் கடல்நீரை குடிநீராக்கும் உற்பத்தித் திறன் மீஞ்சூா் நிலையத்தில் நவ.26 (சனிக்கிழமை) காலை 6 மணி முதல் நவ.28 (திங்கள்கிழமை) காலை 6 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே, மாற்று ஏற்பாடாக மாதவரம், மணலி, திருவொற்றியூா், எா்ணாவூா், கத்திவாக்கம், படேல் நகா், வியாசா்பாடி ஆகிய பகுதிகளுக்கு புழல் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீா் வழங்கப்படும்.

பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீா் பெற, பகுதி 1- 81449 30901 (திருவொற்றியூா், எா்ணாவூா், கத்திவாக்கம்), பகுதி 2 - 81449 30902 (மணலி), பகுதி 3 - 81449 30903 (மாதவரம்), பகுதி 4 - 81449 30904 (படேல் நகா், வியாசா்பாடி) ஆகிய கைப்பேசி எண்களில், அந்தந்தப் பகுதிப் பொறியாளா்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com