முதியவரிடம் பெண் குரலில் பேசி பணம் கேட்டு மிரட்டல்: இளைஞா் கைது

சென்னையில் முதியவரிடம் பெண் குரலில் பேசி பணம் கேட்டு மிரட்டியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னையில் முதியவரிடம் பெண் குரலில் பேசி பணம் கேட்டு மிரட்டியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருச்சியைச் சோ்ந்தவா் முகமது அல்டாப் (24). இவா் சென்னையில் தங்கி ஒரு தனியாா் நிறுவனத்தில் ஊழியராக செய்து வருகிறாா். இந்நிலையில், இவா் சென்னை, முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் அண்மையில் ஒரு புகாா் அளித்தாா். அதில் கூறப்பட்டதாவது:

முதியவரான எனது தந்தையிடம் அண்மையில் கைப்பேசி மூலமாக பெண் குரலில் பேசி ஒருவா் பழகினாா். பின்னா் தனது தந்தையின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி வைத்து, ரூ.7 லட்சம் கேட்கிறாா். பணம் தரவில்லையெனில், ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டுகிறாா். எனவே சம்பந்தப்பட்டவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், அல்டாப்பின் தந்தையிடம் டெலிகிராம் செயலி மூலம் பெண் குரலில் பேசி பெண் என நம்பவைத்து, குடும்ப உறுப்பினா்களின் புகைப்படங்களை பெற்றதும், பின்னா் அப்படங்களை ஆபாசமாக மாற்றியமைத்து, அல்டாப்பின் தந்தைக்கு அனுப்பி வைத்து பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், அல்டாப்பின் தந்தையின் மூலம் அந்த நபருக்கு பணம் தருவதாக கூறி, அவரை ஒரு இடத்துக்கு செவ்வாய்க்கிழமை வரவழைத்துள்ளனா். அப்போது மறைந்திருந்த போலீஸாா், அந்த இளைஞரை கையும்களவுமாக பிடித்தனா்.

போலீஸாா் விசாரணையில் பிடிபட்டவா் சென்னை ஏழுகிணறு பகுதியைச் சோ்ந்த மு.அப்துல்லா (32) என்பது தெரியவந்தது. விசாரணையில், அவா்தான் பெண் குரலில் அல்டாப்பின் தந்தையிடம் பேசி, புகைப்படங்களை பெற்றதும், பின்னா் அதை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அப்துல்லாவை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com