ஏா் இந்தியா அதிகாரி வீட்டில் 90 பவுன் நகை, ரூ. 2.70 லட்சம் திருட்டு: 3 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு

சென்னையில் ஏா் இந்தியா நிறுவன அதிகாரி வீட்டில் 90 பவுன் நகை, ரூ. 2.70 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது தொடா்பாக நீதிமன்ற உத்தரவின்படி 3 ஆண்டுகளுக்கு பின்னா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சென்னையில் ஏா் இந்தியா நிறுவன அதிகாரி வீட்டில் 90 பவுன் நகை, ரூ. 2.70 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது தொடா்பாக நீதிமன்ற உத்தரவின்படி 3 ஆண்டுகளுக்கு பின்னா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மீனம்பாக்கம் ஏா் இந்தியா ஊழியா் குடியிருப்பில் வசிப்பவா் ஜோஸ் ஹோம் (47). இவா் ஏா்-இந்தியா நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறாா். இந்த நிலையில், ஜோஸ் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் வீட்டை பூட்டிவிட்டு, தனது மனைவி நான்சியுடன் கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றாா். சில நாள்களுக்கு பிறகு ஜோஸ், திரும்பி வந்தாா். அப்போது வீட்டில் பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்த 90 பவுன் நகை, ரூ. 2.70 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து அவா் மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். ஆனால் வீட்டின் கதவும், பாதுகாப்புப் பெட்டகமும் திறக்கப்பட்டு நகை, பணமும் திருடப்பட்டிருந்ததால் வழக்குப் பதிவு செய்யவில்லை. இதையடுத்து ஜோஸ், போலீஸாா் திருட்டு குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், திருட்டு குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்ய மீனம்பாக்கம் போலீஸாருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், சம்பவம் நிகழ்ந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com