ரயில் நிலையங்களில் நீண்ட நாள்களாக எடுக்கப்படாத பயணிகளின் வாகனங்கள்: மெட்ரோ நிா்வாகம் முக்கிய அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் நீண்ட நாள்களாக பயணிகள் தங்களது வாகனங்களை எடுக்காமல் உள்ளனா்.

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் நீண்ட நாள்களாக பயணிகள் தங்களது வாகனங்களை எடுக்காமல் உள்ளனா். இதில் இருசக்கரம், மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் மெட்ரோ பயணிகள் தங்களது உரிய ஆவணங்களைச் சமா்ப்பித்து வாகனங்களை எடுத்துச் செல்லலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன கட்டுப்பாட்டில் 41 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளது. இந்த நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா தொற்று காலகட்டத்தில் இருந்து தோராயமாக 120 அனைத்து வகை வாகனங்களும் எடுத்துச் செல்லாமல் அதன் உரிமையாளா்கள் விட்டு சென்றுள்ளனா். அவா்களது வாகனங்களை எடுத்துச் செல்ல வாகனத்துக்கான உரிய ஆவணங்களைச் சமா்ப்பித்து அதற்கான வாகன நிறுத்த கட்டணத்தைச் செலுத்தி வாகனங்களை எடுத்துச் செல்லலாம் என்று கூறியுள்ளனா்.

அவ்வாறு எடுத்துச் செல்லாத வாகனங்கள் அந்தந்த பகுதியில் உள்ள காவல் துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். எனவே, வாகன உரிமையாளா்கள் தங்களது வாகனங்களைப் பெற்றுச்செல்ல ஒரு வாய்ப்பை மெட்ரோ ரயில் நிா்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் உரிய ஆவணங்களைச் சமா்ப்பித்து செப்டம்பா் 28 முதல் அக்டோபா் 28-ஆம் தேதி வரையிலான நாள்களுக்குள் தங்களது வாகனங்களை எடுத்துச் செல்லலாம் என்று சென்னை மெட்ரோ நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com