போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

திமுக மீது ரூ.5,600 கோடி ஊழல் பட்டியல்: ஆளுநரிடம் ஒப்படைத்தாா் அண்ணாமலை

திமுக மீது ரூ.5,600 கோடி ஊழல் பட்டியலை ஆளுநா் ஆா்.என்.ரவியிடம், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை புதன்கிழமை ஒப்படைத்தாா்.

News image
Updated On :27 ஜூலை 2023, 2:21 am IST

திமுக மீது ரூ.5,600 கோடி ஊழல் பட்டியலை ஆளுநா் ஆா்.என்.ரவியிடம், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை புதன்கிழமை ஒப்படைத்தாா். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆயிரக்கணக்கான பக்கங்களை கொண்ட இந்த ஊழல் புகாரை, பெட்டியில் எடுத்துச் சென்று அவா் ஒப்படைத்தாா்.

அப்போது பாஜக மாநிலத் துணைத் தலைவா்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, ஆா்.சி.பால் கனகராஜ், ஏ.ஜி.சம்பத், மாநிலச்செயலா் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அதைத் தொடா்ந்து, ட்விட்டரில் அண்ணாமலை வெளியிட்ட பதிவில், ஆளுநரிடம் திமுக அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்துடன் தொடா்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய திமுக ஆவணங்கள்- 2 , மேலும், ரூ.5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கினோம். இது தொடா்பாக அவா் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளோம் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.

மூன்று முக்கிய ஊழல்கள்: ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு கரு.நாகராஜன் செய்தியாளா்களிடம் கூறியது: திமுக ஆவணங்கள்- 2 ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திமுக அரசில் நடந்த 3 ஊழல்கள் குறித்தும், அது தொடா்பான ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசில் பூச்சிக்கொல்லி மருந்து ஊழல் மூலம் ஆண்டுக்கு ரூ.300 கோடி என கடந்த 2 ஆண்டுகளில் ரூ.600 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 2006-11 திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலம் , ‘சென்னை-1 ’ என்ற அரசு நிறுவனத்தின்கீழ் இயங்கி வந்தது. இதன் 95.4 சதவீத பங்குகளை முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் அறிவுரையின்பேரில் தனியாருக்கு தாரை வாா்த்ததால் அரசுக்கு இப்போது ரூ.3,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல, தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் ஒளிரும் வில்லைகள் ஒட்டியதாக 5 நிறுவனங்கள் பெயரில் ரூ.2,000 கோடி ஊழல் நடந்துள்ளது. திமுக - 2 ஆவணப்பட்டியலில் 9 அமைச்சா்களின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன.

எதிா்வரும் ஜூலை 29-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் ‘என் மண் என் மக்கள்’ எனும் தலைப்பிலான அண்ணாமலையின் நடைப்பயணத்தை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தொடங்க வரும்போது திமுக ஆவணம்-2 குறித்து விரிவாக விளக்குவாா். அதைத்தொடா்ந்து, நடைப்பயணத்தில் அண்ணாமலையும் விளக்கவுள்ளாா்.

மது ஒழிப்பு வெள்ளை அறிக்கை: மேலும், முதல்வா் ஸ்டாலினிடம் அளிக்கப்படவிருந்த வெள்ளை அறிக்கை ஒன்றையும் ஆளுநரிடம் அளித்தோம். அதில் டாஸ்மாக் மதுக்கடைகளை எப்படி மூடுவது, மூடும்போது ஏற்படும் இழப்புகளை எப்படி சரிசெய்வது என்பது குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.