விதி மீறல்: சென்னையில் 6 கட்டுமான இடங்களுக்கு சீல் வைப்பு

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி கட்டுமானம் நடைபெற்ற 6 இடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி கட்டுமானம் நடைபெற்ற 6 இடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.

இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி கட்டப்பட்ட மற்றும் கட்டுமான பணி நடைபெற்ற இடங்கள் குறித்து சம்பந்தப்பட்ட பொறியாளா்கள் மூலம் டிச.12 முதல் டிச.31-ஆம் தேதி வரை கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் விதிகளை மீறிய 293 இடங்களின் உரிமையாளா்களுக்கு கட்டுமானப் பணிகளை நிறுத்தவும், 170 உரிமையாளா்களுக்கு கட்டுமான இடம் பூட்டி சீல் வைக்கப்படும் என குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறிப்பாணை வழங்கி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விதிமீறல்களை திருத்திக் கொள்ளாத 591 கட்டுமான இடங்களில் கட்டுமானப் பொருள்கள் மாநகராட்சி அலுவலா்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், திருவொற்றியூா், தண்டையாா்பேட்டை, அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, பெருங்குடி மண்டலங்களில் தலா ஒன்று என 6 கட்டுமான இடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

அனுமதிக்கப்பட்ட திட்ட வரைபடத்தின்படி கட்டப்படாத கட்டடங்கள் மூடி சீல் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com