எதைப் படித்தேன்?

ஆங்கில எழுத்தாளர் கொல்லீன் ஹூவர் எழுதிய "இட் எண்ட்ஸ் வித் அஸ்' நாவலைப் படித்துள்ளேன்.

ஆங்கில எழுத்தாளர் கொல்லீன் ஹூவர் எழுதிய "இட் எண்ட்ஸ் வித் அஸ்' நாவலைப் படித்துள்ளேன். தற்போது பிரீதா ராஜா கண்ணனின் "சிவா இன் த சிட்டி ஆப் நெக்டார்', "சன் ஆஃப் சிவா' மற்றும் மைனு மாரியலின் "த பி புக்' ஆகியவற்றை வாங்கிச்செல்கிறேன்.
 ஹரிணி, பள்ளி மாணவி, அரும்பாக்கம்.
 
 
 

சே குவேராவின் வாழ்க்கை வரலாற்று நூலை படித்துள்ளேன். ப.சிங்காரத்தின் "புயலிலே ஒரு தோணி', கி.ராஜநாராயணனின் "கோபல்ல
 கிராமம்', சுந்தர ராமசாமியின் "ஒரு புளியமரத்தின் கதை' ஆகியவற்றை வாங்கிச் செல்கிறேன்.
 எஸ். விமல்,
 கணினிப் பொறியாளர், பூந்தமல்லி.
 
 

 ரஷிய எழுத்தாளரான தாஸ்தோவ்ஸ்கி எழுதிய "குற்றமும் தண்டனையும்', பிரேசில் எழுத்தாளர் பௌல் கொயால்கோ எழுதிய "ரசவாதி' நாவலையும் படித்துள்ளேன்.
 சல்மான் ருஷ்டியின் "நள்ளிரவுக் குழந்தைகள்', புதுமைப்பித்தனின் மொழிபெயர்ப்புக் கதைகள் ஆகியவற்றை வாங்கிச் செல்கிறேன்.
 எஸ்.செந்தில் ஆண்டவர்,
 விசைத்தறிக்கூட அதிபர், ராஜபாளையம்.
 
 
 

இந்திராநூயி எழுதிய அவரது "வாழ்க்கை வரலாறு' நூலைப் படித்துள்ளேன். நிவேதிதா லூயிஸ் எழுதிய "முதல் பெண்கள்' நூல் 2 பாகங்கள், வே.குமரவேல் எழுதிய "எங்கே அந்த சொர்க்கம்', பதிப்புத் துறை முன்னோடி முல்லை முத்தையா நூற்றாண்டு மலர் மற்றும் கி.வா.ஜகந்நாதன் எழுதிய "என் ஆசிரியப்பிரான்' உள்ளிட்டவற்றை வாங்கிச் செல்கிறேன்.
 இ.செல்வராஜ், தொழிலதிபர், சென்னை.
 
 
 

யுவல் நோவா ஹராரி எழுதிய "சேப்பியன்ஸ்' ஆங்கில நூலைப் படித்துள்ளேன். மா எழுதிய "கற்பிதம் அல்ல பெருமிதம்', டாக்டர் ஆர்.கார்த்திகேயன் எழுதிய "மனசு போல வாழ்க்கை 2.0' ஆகிய நூல்களை வாôங்கிச் செல்கிறேன்.
 வி.ப்ரீத்தி, பட்டதாரி, செங்கல்பட்டு.
 
 
 

ஸர்மிளா ஸெய்யித் எழுதிய "அடங்க மறு' மற்றும் மார்க்சிம் கார்க்கியின் "தாய்' நாவல் ஆகியவற்றைப் படித்துள்ளேன்.
 புத்தகக் காட்சியில் பக்தவத்சல பாரதியின் "சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர்' என்னும் கட்டுரைத் தொகுப்பையும், ரா.தட்சிணாமூர்த்தியின் "அன்புள்ள மகளே' எனும் தாய் மகளுக்கு எழுதியதாக உள்ள நூலையும் வாங்கிச்செல்கிறேன்.
 ஆர்.யமுனா, போட்டித் தேர்வு பயிற்சி நிறுவன மாணவி, ஆவடி, சென்னை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com