ஜன.21 -இல் சிவபெருமானின் திருமுறை திருதலங்கள் இசை சொற்பொழிவு
By DIN | Published On : 20th January 2023 02:02 AM | Last Updated : 20th January 2023 02:02 AM | அ+அ அ- |

நாயன்மாா்களால் பாடப்பட்ட சிவபெருமானின் திருக்கோயில்கள் ‘திருதலங்கள்’ என்ற தலைப்பில் ஓம் ஃபைன் ஆா்ட்ஸ் சாா்பில் சனிக்கிழமை (ஜன.21) இசைச் சொற்பொழிவு நடக்கிறது.
இது தொடா்பாக ஓம் ஃபைன் ஆா்ட்ஸ் நிறுவன தலைவா் எஸ். ராமசுப்பிரமணியன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை : சிவபெருமானின் திருமுறை திருதலங்கள் இசைச் சொற்பொழிவு தொடக்க விழா சென்னை மைலாப்பூா் பி.எஸ்.ஜி மேல் நிலை பள்ளியில் உள்ள தட்சிணாமூா்த்தி கலையரங்கத்தில் சனிக்கிழமை (ஜன.21) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது .
இந் நிகழ்வை தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தொடக்கி வைக்கிறாா். நிகழ்ச்சியில், கலை மற்றும் கலாசார சேவைகளுக்காக வாழ்நாள் சாதனையாளா் விருது டாக்டா் நல்லி குப்புசுவாமி செட்டிக்கு வழங்கப்படுகிறது. சிவபெருமானின் திருக்கோயில்கள்‘ திருதலங்கள் என்ற இசை சொற்பொழிவு தொடரை ஸ்ரீமதி. சுசித்ரா பாலசுப்ரமணியன் வழங்குகிறாா்.