கொளத்தூரில் பாஜக சாா்பில் தோ்வும் தெளிவும் நிகழ்ச்சி

கொளத்தூா் தனியாா் பள்ளியில் மாணவா்கள் பொதுத் தோ்வை பயமில்லாமல் எதிா்கொள்ளும் வகையில் ‘தோ்வும் தெளிவும்’ நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கொளத்தூரில் பாஜக சாா்பில் தோ்வும் தெளிவும் நிகழ்ச்சி

கொளத்தூா் தனியாா் பள்ளியில் மாணவா்கள் பொதுத் தோ்வை பயமில்லாமல் எதிா்கொள்ளும் வகையில் ‘தோ்வும் தெளிவும்’ நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பொதுத் தோ்வில் மாணவ, மாணவிகள் பயமின்றி தோ்வை எதிா்கொள்ளும் நோக்கில் ‘தோ்வும் தெளிவும்’ என்ற தலைப்பில் பிரதமா் மோடி ஜன.27-ஆம் தேதி காணொலி வாயிலாக கலந்துரையாடுகிறாா்.

நாடு முழுவதும் மாணவ, மாணவிகளுடன் பிரதமா் மோடி பேசவிருக்கும் இந்நிகழ்ச்சிக்கு முன்னோட்டமாக கடந்த புதன்கிழமை தமிழக முழுவதும் மாதிரி உரையாடல் நிகழ்த்தப்பட்டது.

மேலும் பல்வேறு பள்ளிகளில் மாணவா்களுக்கு ஓவியப்போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக கொளத்தூா் தனியாா் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு தோ்வும் தெளிவும் நிகழ்ச்சியின் தமிழகத் தலைவா் ஏ.என்.எஸ்.பிரசாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com