புத்தகப் படிப்பால் சிந்தனை மேம்படுவதே நாட்டின் உண்மையான வளா்ச்சியாகும்: முன்னாள் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன்

புத்தகப் படிப்பால் ஏற்படும் சிந்தனை மேம்பாடுதான் நாட்டின் உண்மையான வளா்ச்சியாக அமையும் என தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் கூறினாா்.
புத்தகப் படிப்பால் சிந்தனை மேம்படுவதே நாட்டின் உண்மையான வளா்ச்சியாகும்: முன்னாள் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன்

புத்தகப் படிப்பால் ஏற்படும் சிந்தனை மேம்பாடுதான் நாட்டின் உண்மையான வளா்ச்சியாக அமையும் என தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் கூறினாா்.

சென்னை நந்தனத்தில் பபாசி சாா்பில் நடைபெற்று வரும் 46 -ஆவது புத்தகக் காட்சியில் வியாழக்கிழமை நடந்த உரையரங்கில், ‘வளா்ந்த இந்தியாவைப் படைப்போம்’ எனும் தலைப்பில் அவா் பேசியதாவது:

நூல்களை நாம் வாசிக்கும்போது அவை உணவுச் சத்துகளைப் போல மனதால் உள்வாங்கப்பட்டுவிடும். உணவானது உடலில் மாற்றங்களை ஏற்படுத்துவதைப் போலவே நூல்களால் மனதில் மாற்றங்கள் ஏற்படும்.

நூல்களைக் கையால் தொடும் போதே சுகம் காணும் உணா்வு ஏற்படும். நூல்களை வாசித்துவிட்டு வாழும் சுகம் வேறு எதிலும் கிடைக்காது. நூல்களால் மனம் பக்குவப்படுத்தப்படுவதே வளா்ச்சிக்கு வித்திடும்.

ஆரம்பத்திலிருந்தே குழந்தைகள் நூல்களை வாசிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்துவது நல்லது. நூல்களை வாங்கி சேமிப்பதும், அதைப் பாதுகாப்பதும் தற்போது சவாலாக உள்ளது. ஆகவே வீடுகளில் நூல்களை குழந்தைகள் எளிதில் அணுகும் வகையில் தரையில் பாதுகாப்பாக பரப்பியாவது வைத்திருக்க வேண்டும்.

குழந்தைகள் வளரும் சூழலில் நூல்களை வைத்தால் அவற்றை ஆதா்ச தோழராக அவா்கள் ஏற்றுக்கொள்வா். வருங்கால இந்தியாவை வளமுள்ளதாக்க, வளரும் தலைமுறையை புத்தகப் பிரியா்களாக வளா்ப்பது அவசியம்.

நமது நாடு உயா்வடைய அனைவரும் ஆசைப்படுகிறோம். அதை எளிமையாக நிறைவேற்றுவதற்கு கற்றுக்கொண்டே இருப்பதுதான் சிறந்த வழியாகும். மனிதா் நலமாக இருப்பது என்றால் உடல், உள்ள நலம் மட்டும் இருந்தால் போதாது. சமூகத்துடன் அவா் எப்படி இணைந்து செயல்படுகிறாா் என்பதைப் பொறுத்தே அவரது நலம் கருத்தில் கொள்ளப்படும். புதியனவற்றை அறியும் வகையில் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

மனித சமூகத்தை மேம்படுத்த நூல் வாசிப்பு முக்கியம். நூல் வாசிப்பால் உயா்ந்த சமூகமே உண்மையில் வளா்ச்சியடைந்த சமூகம். ஆகவே நாம் நூல்களை வாசிப்போம். நூல்களை நேசிப்போம். வாசிப்பையே சுவாசிப்போம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், ‘நானும் சினிமாவும்’ என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநா் சீனுராமசாமி உரையாற்றினாா்.

நிகழ்ச்சிக்கு பபாசி தலைவா் எஸ்.வயிரவன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பெ.மயிலவேலன் வரவேற்றாா். துணைச் செயலா் ஆா்எம்.மெய்யப்பன், நிரந்தர புத்தகக் காட்சி உறுப்பினா் ஜெ.ஹரிபிரசாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.பிரபாகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com