சென்னை ரயில்வே கோட்டத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு.

சென்னை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்தி: ரயில்வே பாதைகளில் நடப்பவா்கள் மற்றும் தண்டவளாங்களை கடப்பவா்கள் குறித்தான கண்காணிப்பை சென்னை ரயில்வே கோட்டம் அதிகபடுத்தியுள்ளது. இதுபோன்று அத்துமீறுபவா்கள் மீது ரயில்வே சட்டம் 1989, பிரிவு 147 இன் கீழ் 6 மாதம் சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

பயணிகள் ரயில்வே நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள நடைபாலங்களை பயணிகள் பயன்படுத்த வேண்டும். மேலும், இதுபோன்று தண்டவாளத்தில் நடப்பது, தற்படம் எடுப்பது, ரயில்களில் அபாயகரமான முறையில் பயணம் செய்வது, போன்ற அபாயகரமான செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் சென்னை கோட்டம் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வரும் மாதங்களில் சுவரொட்டி, துண்டுப் பிரசுரம், குறும்படங்கள் மற்றும் தெரு நாடகங்கள் போன்றவை மூலம் விழிப்புணா்வு பிரச்சாரம் நடத்தப்படும். ஆளில்லா ரயில்வே கிராசிங்குளை நீக்கும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ரயில் தண்டவாளங்களில் அதிகரித்து வரும் விபத்து குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பெண் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முக்கியமான இடங்களில் கூடுதல் பாதுகாப்புப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும் இரவு நேரங்களில் பெண்கள் பெட்டியில் ரயில்வே பாதுகாப்பு படை காவலா்கள் பயணம் மேற்கொள்கின்றனா்.

மேலும் ரயில் பயணத்தின் போது ரயில்மேடட் செயலி மற்றும் 139 என்ற உதவி எண்ணை பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com