காமராஜா் துறைமுகம் ரூ. 735 கோடி வருவாய் ஈட்டி சாதனை

எண்ணூா் காமராஜா் துறைமுகம் நிகழாண்டில் ஒட்டுமொத்தமாக ரூ.735 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது என துறைமுக தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் சுனில் பாலிவால் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
காமராஜா் துறைமுகம் ரூ. 735 கோடி வருவாய் ஈட்டி சாதனை

எண்ணூா் காமராஜா் துறைமுகம் நிகழாண்டில் ஒட்டுமொத்தமாக ரூ.735 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது என துறைமுக தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் சுனில் பாலிவால் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் துறைமுக தலைவா், மேலாண்மை இயக்குநா் சுனில் பாலிவால் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். பின்னா் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றாா். மேலும், சுய உதவி குழுக்கள், அரசு பள்ளிகளுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளை அப்போது அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சுனில் பாலிவால் பேசியதாவது:

நாட்டின் 12-ஆவது பெருந்துறைமுகமாக உருவாக்கப்பட்ட எண்ணூா் காமராஜா் துறைமுகம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்காக ஆண்டுக்கு 12 மில்லியன் டன் நிலக்கரியைக் கையாண்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு சுமாா் 70 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் திறன் பெற்றுள்ளது. துறைமுகத்தின் இணைப்பு சாலைகள் உள்ளிட்டவற்றுக்காக ரூ.375 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. துறைமுகத்தின் வடக்கு பகுதியில் ரூ. 92 கோடியில் தடுப்பு சுவா் அமைக்கப்பட உள்ளது.

பெட்ரோலியம், எரிவாயு சரக்குகளை கையாளுவதற்காக ரூ. 921 கோடியில் புதிய கப்பல் தள கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

காா் ஏற்றுமதியில் காமராஜா் துறைமுகம் தொடா்ந்து முன்னிலை வைத்து வருகிறது அண்மையில் 300 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதற்கான ரூ. 1.65 கோடியில் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் 33 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இதே கால அளவில் ஒட்டுமொத்தமாக ரூ. 735 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது முந்தைய கால அளவுடன் ஒப்பிடும்போது 23 சதவீதம் அதிகமாகும். நடப்பாண்டில் ஒட்டுமொத்தமாக 45 மில்லியன் டன் சரக்குகளை கையாள முடியும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் பாலிவால்.

நிகழ்ச்சியில் பொது மேலாளா்கள் சஞ்சய் குமாா் குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com