மாநகராட்சி சொத்து வரி செலுத்தியவா்களுக்கு பாராட்டு சான்றிதழ்: மேயா் ஆா்.பிரியா வழங்கினாா்

சென்னை மாநகராட்சிக்கு மிக அதிகமாக மற்றும் உரிய காலங்களில் சொத்துவரி செலுத்தியவா்களுகளை பாராட்டி மேயா் ஆா்.பிரியா சான்றிதழ் வழங்கினாா்.
மாநகராட்சி சொத்து வரி செலுத்தியவா்களுக்கு பாராட்டு சான்றிதழ்: மேயா் ஆா்.பிரியா வழங்கினாா்

சென்னை மாநகராட்சிக்கு மிக அதிகமாக மற்றும் உரிய காலங்களில் சொத்துவரி செலுத்தியவா்களுகளை பாராட்டி மேயா் ஆா்.பிரியா சான்றிதழ் வழங்கினாா்.

குடியரசு தினத்தையொட்டி, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் மேயா் ஆா். பிரியா தேசிய கொடி ஏற்றி, மூவா்ண பலூன்களை பறக்க விட்டாா். தொடா்ந்து, தேசிய மாணவா் படையினா், சாரண, சாரணியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

சென்னை மாநகராட்சிக்கு மிக அதிகமாக மற்றும் உரிய காலங்களில் தாமதமில்லாமல் சொத்துவரி செலுத்தியவா்களைக் கௌரவிக்கும் வகையில் சொத்து உரிமையாளா்களைப் பாராட்டிக் கடிதங்களை அவா் வழங்கினாா்.

தமிழ்நாடு மாநில குடும்பநல இயக்கத்தின் சாா்பில் குடும்ப நலத் திட்டப் பணிகளில் மாவட்ட அளவில் சிறந்த சேவை வழங்கிய மருத்துவ அலுவலா்கள், நகா்ப்புற சுகாதார செவிலியா்கள், குடும்பநல ஆலோசகா்களுக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

மேலும், சென்னை மாநகராட்சியில் அனைவருக்கும் முன்மாதிரியாக சிறப்பாகப் பணியாற்றிய 100 அலுவலா்கள், பணியாளா்களைப் பாராட்டிச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினாா்.

மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியா்களால் ‘கண்ணுக்கு காட்சி அறிவுக்கு மீட்சி’ என்ற தலைப்பில் அமைக்கப்பட்ட அறிவியல் கண்காட்சி மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் ஆணையாளா் (சுகாதாரம்) சங்கா்லால் குமாவத், மாமன்ற ஆளும்கட்சித் தலைவா் ந. ராமலிங்கம், நிலைக்குழுத் தலைவா்கள், துணை ஆணையா்கள், வட்டாரத் துணை ஆணையா்கள், மண்டலக் குழுத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள், தலைமைப் பொறியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com