சென்னையில் குண்டா் சட்டத்தில் 3 மாதங்களில் 278 போ் கைது

சென்னையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் 3 மாதங்களில் 278 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சென்னையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் 3 மாதங்களில் 278 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இதில் கொலை, கொலை முயற்சி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 128 பேரும், திருட்டு, வழிப்பறி, பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 53 பேரும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 67 பேரும், குட்கா உள்ளிட்ட போதைப் பாக்கு விற்ாக 16 பேரும், பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 4 பேரும், சைபா் குற்றத்தில் ஈடுபட்டதாக 2 பேரும், மதுபானம் விற்ாக 3 பேரும், பெண்களை மானபங்கப்படுத்தியதாக 4 பேரும், உணவுப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக ஒருவரும் என மொத்தம் 278 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபா்கள், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபா்கள், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் நபா்கள் ஆகியோா் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com