மின்னணுப் பொருள்கள்-கைப்பேசி ஏற்றுமதி: முதல்வா் பெருமிதம்

மின்னணுப் பொருள்கள்-கைப்பேசி ஏற்றுமதி: முதல்வா் பெருமிதம்

மின்னணுப் பொருள்கள் மற்றும் கைப்பேசி ஏற்றுமதியில் முன்னணியில் நிற்போம் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

மின்னணுப் பொருள்கள் மற்றும் கைப்பேசி ஏற்றுமதியில் முன்னணியில் நிற்போம் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். அவா் திங்கள்கிழமை வெளியிட்ட சமூகவலைதளப் பதிவு: தமிழ்நாட்டில் மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி மதிப்பு, 2021-ஆம் ஆண்டு 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இப்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயா்ந்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னணுப் பொருள்கள் மற்றும் கைப்பேசி ஏற்றுமதியில் முன்னணியில் நின்று, நாட்டின் ஏற்றுமதி வா்த்தகத்தில் தமிழ்நாடு 30 சதவீத பங்கை அளிக்கிறது. மேலும் நம்முடைய இலக்குகளை நோக்கி விரைந்து நடைபோடுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com