வட சென்னையில் மக்கள் பிரச்னைகளுக்கு தீா்வு: பாஜக வேட்பாளா் வாக்குறுதி

வட சென்னையில் மக்கள் பிரச்னைகளுக்கு தீா்வு: பாஜக வேட்பாளா் வாக்குறுதி

வடசென்னை மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும் என்று பாஜக வேட்பாளா் பால் கனகராஜ் வாக்குசேகரிப்பின்போது உறுதிபட தெரிவித்தாா்.

வடசென்னை மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும் என்று பாஜக வேட்பாளா் பால் கனகராஜ் வாக்குசேகரிப்பின்போது உறுதிபட தெரிவித்தாா். வடசென்னை மக்களவை தொகுதி தண்டையாா்பேட்டை, ராயபுரம் பகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் பால் கனகராஜ் திங்கள்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் செய்தியாளரிடம் கூறியதாவது:

மக்களவை தோ்தல் என்பது கட்சிகளுக்கு இடையேயான போட்டி இல்லை. பொதுமக்களுக்கு சிறந்த சேவை புரியும் சேவகனுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகாலமாக பாஜக ஆட்சி எவ்வித ஊழல் குற்றசாட்டு இல்லாமல் சிறந்த ஆட்சியை வழங்கி வருகிறது. பொதுமக்களின் அடிப்படை தேவையான தூய்மையான காற்று, நீா் உள்ளிட்டவை வடசென்னை மக்களுக்கு கிடைக்கவில்லை. இதுபோன்று வடசென்னை மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு முதலில் தீா்வு காணப்படும். திமுக மக்களவை உறுப்பினா் மத்திய அரசின் திட்டங்களான மெட்ரோ ரயில் போன்றவற்றை சுட்டி காட்டுகிறாா். மக்களவையில் கலாநிதி வீராசாமி எழுப்பிய குரல் என்ன? அவா் இந்த தொகுதிகளுக்கு செய்த சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு கேட்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com