கச்சத்தீவை மீட்க சர்வதேச நீதிமன்றத்தை மத்திய அரசு அணுக வேண்டும்: டி.ஆர்.பாலு

கச்சத்தீவை மீட்க சர்வதேச நீதிமன்றத்தை மத்திய அரசு அணுக வேண்டும்: டி.ஆர்.பாலு

தாம்பரம்: கச்சத் தீவை இலங்கையிடம் இருந்து மீட்க சர்வதேச நீதிமன்றம், ஐ.நா. சபைக்கு மத்திய அரசு செல்ல வேண்டும் என ஸ்ரீபெரும்புதூர் மக்களவை திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியது:

மக்களவையில் கச்சத் தீவு பிரச்னை குறித்து பேசுவதற்கு 4 முறை நோட்டீஸ் அளித்தும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படவில்லை. மக்களவையில் தீர்மானம் கொண்டுவர சம்பந்தப்பட்ட அமைச்சர் ஒப்புக்கொள்ளவில்லை என்று மறுத்து விடுவார்கள்.

இப்போது 4 நாள்களாக பலர் (பாஜகவினர்) கச்சத் தீவு பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பழைய வரலாறு எல்லாம் தெரியுமா? அவற்றை படித்தாரா என்பது தெரியவில்லை. கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு சொந்தமானது. கச்சத்தீவை மீட்க சர்வதேச நீதிமன்றத்துக்கும், ஐ.நா.

சபைக்கும் மத்திய அரசு செல்ல வேண்டும். கச்சத்தீவை நாம் திரும்பப் பெற்று தினமும் அவதிப்படுகின்ற மீனவர்களுக்கு உதவுவது நமது கடமை என்றார் அவர்.

கூட்டத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com