டெலிகிராம் செயலி மூலம் ரூ. 1.60 கோடி மோசடி: 3 பேர் கைது

Photo
Photo

ஆவடி: ஆவடியில் டெலிகிராம் செயலி மூலம் பகுதி நேர வேலைவாய்ப்பு எனக் கூறி ரூ. 1.60 கோடி மோசடி செய்த 3 பேரை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (64). வெளிநாட்டில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இதற்கிடையில் அண்மையில் இவருக்கு டெலிகிராம் செயலியில் வந்த ஒரு இணைப்பில் பகுதி நேர வேலைவாய்ப்பு சலுகை இருப்பதாக வந்த செய்தியைப் பார்த்து, அந்த இணைப்பை தொடர்பு கொண்டார். அப்போது, அதில் உள்ள உணவகங்களுக்கு விமர்சனம் (ரெவியூ) பார்த்து மதிப்பீடு அளிக்க கூறியுள்ளனர். அப்போது அவருக்கு ஒவ்வொரு மதிப்பீடு அளித்தவுடன் அதற்கு ஏற்ப தரகு தொகை வரும் என கூறியுள்ளனர்.

இதை நம்பிய அவர் முதலில் அளித்த மதிப்பீட்டிற்கு அவரது வங்கிக் கணக்கிற்கு வந்த சிறு தொகையை பார்த்தவுடன், அவர்கள் கூறியவாறு செய்து, மதிப்பீடு தரகு தொகையை பெற வேண்டுமானால், அவர்கள் குறிப்பிடும் வங்கி கணக்கு பணத்தை அனுப்ப வேண்டும், அப்படி செய்தால் இரட்டிப்பு பணம் கிடைக்கும் எனக் கூறியுள்ளனர்.

இதையடுத்து, முத்துகிருஷ்ணன் அவர்கள் கூறிய வங்கிக் கணக்கிற்கு ரூ. 1.51 கோடியை அனுப்பி உள்ளார். பின்னர் அவர்கள் முத்துகிருஷ்ணனுக்கு தரகு தொகையை தராமல் ஏமாற்றி பணத்தை மோசடி செய்ததாகத் தெரிகிறது.

இதே போல சென்னை, எர்ணாவூரைச் சேர்ந்த தில்லிகுமாரி (33) என்ற தனியார் நிறுவன ஊழியருக்கு டெலிகிராம் செயலியில் வந்த இணைப்பை பார்த்து தொடர்பு கொண்ட போது, கூகுள் மதிப்பீட்டில் இறுதி பணி (பைனல் டாஸ்க்) அளிக்கக் கூடியதாகவும், ஒவ்வொரு பணி முடிந்தவுடன் அதற்கு தரகுத் தொகை வரும் எனவும் கூறியுள்ளனர். இதை நம்பி அவரது கணக்குக்கு முதலில் சிறு தொகை பார்த்தவுடன் அவர்கள் கூறியவாறு, பணி தரகு தொகை பெற வேண்டுமானால், குறிப்பிடும் வங்கிக் கணக்கிற்கு ரூ. 9 லட்சத்தை தில்லிகுமார் அனுப்பியுள்ளார்.

பிறகு தரகு தொகை தராமல் பணத்தை மோசடி செய்துள்ளனர்.

இது குறித்து மேற்கண்ட இருவரும் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தனர். ஆணையர் கி.சங்கர் புகார் மனுவை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் போலீஸார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தினர். வழக்கு தொடர்பாக போலீஸார் ஆவடி, டிரைவர்ஸ் காலனியைச் சேர்ந்த மணிகண்டன் (33), அவரது நண்பர்கள் சென்னை, பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் (33), சண்முகவேல் (32)ஆகிய 3 பேரை கைது செவ்வாய்க்கிழமை செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com