கோடைகால நீச்சல் பயிற்சி

கோடைகால நீச்சல் பயிற்சி தமிழகத்தில் 5 கட்டமாக நடத்தப்படும் எனதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பாக 2024-ஆம் ஆண்டுக்கான ‘நீச்சல் கற்றுக்கொள்ளுங்கள்’ என்ற நீச்சல் பயிற்சி முகாம் ஏப்.1-ஆம் தேதி தொடங்கி ஜூன் 3-ஆம் தேதி வரை 5 கட்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை தொடங்கிய முதல் கட்ட பயிற்சி வகுப்பு ஏப்.12 வரை நடைபெறுகிறது.

தொடா்ந்து ஏப். 14-25 வரை 2-ஆம் கட்ட பயிற்சியும், ஏப்.27 முதல் மே 8 வரை 3-ஆம் கட்ட பயிற்சியும், மே 10 முதல் 21வரை 4-ஆம் கட்ட பயிற்சியும், மே 23 முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை 5-ஆம் கட்ட பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி முகாமில் பள்ளி மாணவ, மாணவிகள், இளைஞா்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு அந்தந்த மாவட்டத்தின், மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் அல்லது இணைதளம் அல்லது 95140 00777 என்ற தகவல் மைய எண்ணில் தகவல்களைப் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com