தினசரி மின்நுகர்வு புதிய உச்சம்

தினசரி மின்நுகர்வு புதிய உச்சம்

சென்னை: தமிழகத்தின் தினசரி மின்நுகர்வு 20,125 மெகாவாட்-ஆக அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தின் தினசரி மின்நுகர்வும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்படி, தமிழகத்தின் தினசரி உச்சபட்ச மின் நுகர்வு ஏப்.5-ஆம் தேதி 19,580 மெகாவாட்-ஆக பதிவாகியிருந்த நிலையில், மாநிலத்தின் மின் நுகர்வு தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இதன்படி, திங்கள்கிழமை நிலவரப்படி தினசரி உச்சபட்ச மின்நுகர்வு 20,125 மெகாவாட்-ஆக அதிகரித்துள்ளது. இந்த மின்தேவை எந்தத் தங்கு தடையுமின்றி நுகர்வோருக்கு விநியோகம் செய்யபட்டு வருவதாகவும், தொடர்ந்து மாநிலத்தின் மின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தமிழக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com